கேரளாவில் 3வது நாளாக இன்று (செப்டம்பர் 13) காலை 7 மணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் தொடங்கினார்.
பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி தொடங்கினார். குமரி மாவட்டத்தில் மொத்தம் 4 நாட்களில் 52 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டார்.
தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவனந்தபுரம் நகரத்தில் உள்ள கழக்கூட்டத்தில் நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு கேரளாவில் 3வது நாள் நடை பயணத்தை ராகுல்காந்தி தொடங்கி உள்ளார்.
இந்த பயணத்தை முற்பகல் 11 மணிக்கு அட்டிங்கல் பகுதியில் உள்ள எஸ் எஸ் பூஜா கன்வென்சன் மையத்தில் ராகுல் காந்தி நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கும் ராகுல்காந்தி, கலம்பலத்தில் இன்றைய பயணத்தை நிறைவு செய்கிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’ராகுல் ஷூ பிராண்ட் பத்தியும் விசாரிச்சு சொல்லுங்களேன்!’ பாஜகவுக்கு நெட்டிசன்கள் கேள்வி!