நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் கட்டடத்தில் தான் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு தங்கியிருந்தார். இந்த கட்டடத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (என்.எம்.எம்.எல்) இருந்தது.
இந்த அருங்காட்சியகத்தின் பெயரை பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பி.எம்.எம்.எல்) என்று மாற்றுவதற்கு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் படி இந்த பெயர் மாற்றமானது ஆகஸ்ட் 16 (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.
நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பியுமான ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
லடாக் செல்லும் போது இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி ”நேரு அவரது சிறப்பான பணியால் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் பெயரால் அல்ல” என்று தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”பிரதமர் மோடி நேருவின் பாரம்பரியத்தை சிதைத்து, அழித்து வருகிறார்.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஜவாகர்லால் நேருவின் மகத்தான பங்களிப்பை பிரதமர் மோடி ஒருபோதும் பறிக்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
மோனிஷா
செங்கல்பட்டு: லோகோ பைலட்டை தாக்கிய நபர் கைது!
ஜெயிலர் வசூல் எவ்வளவு? – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
Comments are closed.