இந்திய ஒற்றுமை பயணத்தைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என 4 மாநிலங்களைக் கடந்து தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று (நவம்பர் 2 ) நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”இந்திய ஜெர்ஸிக்கு தோல்வியே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளதோடு இந்திய அணி சிறப்பாக விளையாடியதாக பதிவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இரண்டு நாள் மழையில் இற்றுப்போன தமிழகம்: எடப்பாடி
ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதூரியா: யார் தெரியுமா?