ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 30) ஒற்றுமை நடைபயணம் 22வது நாளை, கர்நாடக மாநிலம் ஊட்டி கலிகட் சந்திப்பு பகுதியில் தொடங்கி சாம்ராஜநகர் பகுதியில் நிறைவு செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையில் ஒற்றுமை நடைபயணம் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் நான்கு நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கேரளாவில் செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபயணத்தை துவங்கினார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.
கேரளாவில் 17 நாட்கள் நடைபயணம் செய்த ராகுல் காந்தி, நேற்றுடன் கேரளாவில் தனது நடைபயணத்தை முடிவு செய்தார்.
கேரளாவிலிருந்து நேற்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதிக்கு வந்தார். நேற்று இரவில் கூடலூரில் ராகுல் காந்தி தங்கினார்.
இன்று கூடலூர் பகுதியிலிருந்து கர்நாடகா மாநிலத்தின் குண்டல்பெட் பகுதிக்கு கார் மூலமாக சென்றார்.
அவருக்கு கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் ஊட்டி – கலிகட் சந்திப்பு பகுதியில் நடைபயணத்தை துவங்கினார்.
பஞ்சனஹல்லி பகுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் ராகுல் காந்தி, பின்னர் மாலை 5 மணிக்கு பெண்டகள்ளி பகுதியிலிருந்து நடைபயணத்தை துவங்குகிறார்.
மாலை 7 மணியளவில் பேகுர் பகுதியில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
பேகுர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ராகுல் இரவு ஓய்வு எடுக்கிறார். கர்நாடகாவில் 21 நாட்கள் ராகுல் நடைபயணம் செய்ய உள்ளார்.
7 மாவட்டங்களுக்கு பயணிக்கும் ராகுல், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 511 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்ய உள்ளார்.
இதுவரை ராகுல் காந்தி 532 கி.மீ பயணம் செய்துள்ளார்.
செல்வம்
அதிமுக பொதுக்குழு வழக்கு : இன்று விசாரணை!
”அப்படி கூப்பிடாதீங்க”: 90’S கிட் கார் ஓட்டுநரின் வேண்டுகோள்!