ராகுல் காந்தி நடைபயணத்தின் போது, சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 12) 6ஆவது நாளாக இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்கிறார்.
கேரள மாநிலம் நெமம் பகுதியிலிருந்து கலக்கோட்டம் வரை நடைபயணம் செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை (பாரத் ஜோடா யாத்ரா) ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார்.
நேற்று (செப்டம்பர் 11) ஐந்தாவது நாளாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள பாறசாலை – திருவனந்தபுரம் – திருச்சூர் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், திருச்சூரிலிருந்து நிலாம்பூர் வரை மாநில நெடுஞ்சாலை வழியாகவும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் கேரளாவில் இன்று (செப்டம்பர் 12) தனது நடைபயணத்தை மேற்கொள்கிறார்.
அதன்படி, நெமம் பகுதியில் காலை 11 மணியளவில் நடைபயணத்தை தொடங்கிய அவர், மாலை 5 மணியளவில் கலக்கோட்டம் பகுதியில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார். கேரள மாநிலத்தில், 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 450 கி.மீ நடைபயணம் செய்கிறார்.
ராகுல் காந்தி நேற்று (செப்டம்பர் 11) கேரளாவில் நடைபயணம் செய்தபோது, நெய்யட்டின்கர என்ற பகுதியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மம்மன் மற்றும் கோபிநாத் நாயர் நினைவிட திறப்பு விழாவிற்கு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காங்கிரஸ் எம்.பி சசிதரூர், கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி நெய்யட்டின்கர வழியாக நடைபயணம் சென்ற போதும் அவர் சுதந்திர போராட்ட வீரர் நினைவிட திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“சுதந்திர போராட்ட வீரர் நினைவிடத்திற்கு செல்லாமல் அவ்வளவு சீக்கிரம் ராகுல் காந்தி ஏன் யாத்திரையை முடித்தார்” என பாஜக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது காங்கிரஸ் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக சசிதரூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
செல்வம்
கேரளாவில் நடைபயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி