ராகுல் காந்தி இன்று (அக்டோபர் 15) ஒற்றுமை நடைபயணம் 35-வது நாளை கர்நாடக மாநிலம் ஹளகுந்தி முட் பகுதியில் துவங்கி, சங்கநாக்கல்லு பகுதியில் நிறைவு செய்கிறார்.
இன்றுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 1000 கி.மீ தூரம் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ஆம் தேதி துவங்கினார்.
தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கர்நாடகாவில் இன்று 15-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை 35 நாட்கள் நடைபயணம் செய்த ராகுல் காந்தி, இன்றுடன் 1000 கி.மீ தூரத்தை நிறைவு செய்கிறார்

ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது, பொதுமக்களும், இளைஞர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் நடைப்பயணத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அவருடன் நடைபயணம் செல்கின்றனர்.
சாலையோர கடைகளில் தேநீர் அருந்துவது, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் உரையாடுவது என ராகுல் காந்தி தனது நடைபயணத்தை உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ராகுல் காந்தி நடைபயணத்தின் போது நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள் சிலவற்றை இங்கே காணலாம்.
செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்போது ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கட்டி தழுவினார்.

செப்டம்பர் 9-ஆம் தேதி, ராகுல் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட போது, வில்லேஜ் குக்கிங் யூடியுப் சேனல் நபர்களுடன் தோல் மேல் கை போட்டு நடைபயணம் சென்றார்.

செப்டம்பர் 26-ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது, குழந்தைகளுடன் கால்பந்து விளையாடினார்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ராகுல் காந்தி மைசூரில் உள்ள காதி கிராமுத்யாக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

அக்டோபர் 2-ஆம் தேதி, மைசூரு பகுதியில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது மழை பெய்தது. ராகுல், மழையில் நனைந்து கொண்டு தனது உரையை தொடர்ந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்தது.
அக்டோபர் 4-ஆம் தேதி, கர்நாடகா பந்தவாலு பகுதியில் ராகுல் நடைபயணம் செய்தபோது, சாதி பிரச்சனையால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டு கிடந்த சாலையை திறந்து வைத்தார்.

அக்டோபர் 5-ஆம் தேதி, கர்நாடகாவில் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் கைகோர்த்து ராகுல் சிறிது தூரம் ஓடிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

அக்டோபர் 6-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் மந்தியா மாவட்டத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நடைபயணம் மேற்கொண்டார். சோனியா காந்திக்கு, ராகுல் ஷீ லேஸ் கட்டி விட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அக்டோபர் 7-ஆம் தேதி, 2017-ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
அக்டோபர் 10-ஆம் தேதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைந்தவுடன் தனது நடைபயணத்தின் போது, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோருடன் ராகுல் காந்தி முலாயம் சிங் யாதவிற்கு அஞ்சலி செலுத்தினார்.

அக்டோபர் 12-ஆம் தேதி, கர்நாடகாவில் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் ஆகியோருடன் தண்டால் எடுத்தார்.

ராகுல் காந்தி இன்று பெல்லாரி பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்க்கே நடைபயணம் மேற்கொண்டார்
செல்வம்
தூங்காமல் புலம்பிய கொலையாளி : 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு!
எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் சென்ற விவகாரம்: கே.பி.முனுசாமி பதில்!