அம்மாவின் அன்பை நாட்டிற்கு பகிர்ந்த ராகுல்

இந்தியா

தனது அம்மாவிடம் பெற்ற அன்பை நாட்டுடன் பகிர்ந்து கொள்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா 100 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய நடைப்பயணம் இன்று (டிசம்பர் 24) டெல்லியில் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இன்றைய நடைப்பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் (பிரியங்கா காந்தி), மருமகன் (ராபர்ட் வதேரா) மற்றும் பேரக்குழந்தைகள் எனக் காந்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சிறிது தூரம் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் நடந்து சென்றனர்.

காந்தி குடும்பம் முழுவதும் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்றாலும் சோனியா மற்றும் பிரியங்கா காந்தி இருவரம் இரண்டாவது முறையாக நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டார். இன்றைய நடைப்பயணத்தில் தன்னுடைய அம்மா கலந்து கொண்டது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது அம்மாவிடம் இருந்து பெரும் அன்பினை என் நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற இன்றைய நடைப்பயணத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

ரூ.100 கோடியில் சிலை: பெரியார் தடியால் அடித்திருப்பார் – சீமான்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மாறுவேடத்தில் 8 ஆயிரம் போலீஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *