ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிய பெண்கள் ரேடியோ நிலையம் தலிபான்களால் மூடப்பட்டது. radio station suspend by taliban
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 5 மாதங்கள் கழித்து ரேடியோ பேகம் என்ற ரேடியோ நிலையம் காபூலில் தொடங்கப்பட்டது.
இந்த ரேடியோவில் அரசியல் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பாகாது. முற்றிலும் பெண்கள், மாணவிகளின் கல்வி குறித்து மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பெண்கள் பாடுவது, சத்தமாக படிப்பது, நடனம் ஆடுவது போன்றவை ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறி ரேடியோ பேகத்தை தலிபான்கள் மூடியுள்ளனர்.
காபூலிலுள்ள ரேடியோ பேகம் அலுவலகத்துக்குள் புகுந்த தலிபான்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், ஹார்ட்டிஸ்க்குகள், இரு செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து சென்றனர்.
அங்கிருந்த இரு ஆண் ஊழியர்களையும் கைது செய்துள்ளனர். இந்த ரேடியோ நிலையத்துக்கு வெளிநாட்டு சேனல் ஒன்று பின்னணியில் இருப்பதாகவும் முறையான லைசென்ஸ் வாங்காமல் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பியதாக தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 2024 ம் ஆண்டு மட்டும் 12 ஊடக நிறுவனங்களை தலிபான்கள் தடை செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் முற்றிலும் பெண்களுக்காக தினமும் 6 மணி நேரம் இயங்கிய ஒரே ரேடியோ நிலையம் இதுதான். தற்போது, அதையும் தலிபான்கள் மூடி விட்டனர்.
இதற்கிடையே ஹபீப் கான் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மாணவிகள் பள்ளி செல்ல தலிபான்கள் தடை விதித்திருப்பதால் சிறுமி ஒருவர் சாலையில் ரொட்டிகளை விற்கிறார் என்றும் தலிபான்களால் 14 லட்சம் சிறுமிகள் ஆப்கானிஸ்தானில் பள்ளி செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளார். radio station suspend by taliban