எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கு: பிரிட்டன் செல்லும் குடியரசுத் தலைவர்

இந்தியா

மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

பிரிட்டனின் மகாராணியான எலிசபெத் செப்டம்பர் 8 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அஞ்சலிக்காகக் கொண்டுவரப்பட்டது.

அங்கு லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக 4 நாள்கள் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மகாராணியின் இறுதிச் சடங்கு வருகிற செப்டம்பர் 19 நடைபெறுவதால் அதில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பிரிட்டன் செல்ல உள்ளனர்.

இந்நிலையில், இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17 முதல் 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரவுபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று இந்தியா சார்பாக எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ராணி எலிசபெத்தும் இந்திய பிரதமர்களும்: நேரு முதல் மோடி வரை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *