போர் குறித்து உக்ரைன் உட்பட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், மேற்கத்திய நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 300 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா சமீபத்தில் அதிநவீன ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
-ராஜ்
”ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர் நேரு” : முதல்வர் ஸ்டாலின்
மது குடிப்பவர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்: அமைச்சர்!