ராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு: கைதானவர் வாக்குமூலம்!

இந்தியா

முன் விரோதம் காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படையைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் குமார் ஆகிய 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ராணுவ முகாமிற்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பீரங்கி படையின் மேஜர் அசுதோஷ் சுக்ல “குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்த இருவர், நாங்கள் வருவதைக் கண்டு அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.

அவர்கள் ராணுவ முகாமில் இருந்து காணாமல் போன இன்சாஸ் துப்பாக்கியும் மற்றொருவர் கோடாரியும் வைத்திருந்தனர்” என்று பேட்டியளித்திருந்தார்.

ஏப்ரல் 9 ஆம் தேதி ராணுவ முகாமில் இருந்து ஒரு இன்சாஸ் துப்பாக்கியும் 28 தோட்டாக்களும் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

பீரங்கி படை மேஜர் கூறியதன் அடிப்படையில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் மீது பஞ்சாப் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இந்நிலையில், ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு நடத்திய குன்னார் தேசாய் மோகன் என்ற ராணுவ வீரரை இன்று காவல்துறை கைது செய்துள்ளது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளதாக பதிண்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குல்நீத் சிங் குராணா தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் போன இன்சாஸ் துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்களையும் திருடியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய பிறகு துப்பாக்கியை ஒரு கழிவு நீர் கால்வாயில் வீசியதாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து, மோகன் போலீசாரின் கட்டுப்பாட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரிடம் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மோனிஷா

உயரும் முத்திரைத்தாள் கட்டணம் !

கலாஷேத்ரா விவகாரம் : உயர் நீதிமன்றத்தின் புது உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “ராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு: கைதானவர் வாக்குமூலம்!

  1. பீறங்கி படை மேஜர் அடுத்தவர் மீது பழியை போடுகிறார் இதெல்லாம் எப்படி? நாட்டின் தலைவர் அப்படியே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *