ஹோட்டல்களின் தோற்றங்களைக் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றியமைப்பது வழக்கம். அதேபோல் தற்போதைய நவீன வாழ்வில் ஹோட்டல்கள் மட்டுமின்றி அங்கு பரிமாறப்படும் உணவுகளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் புதிது புதிதாக வழங்கிவருகின்றன.
இந்நிலையில், புனேவில் உள்ள ”டோராப்ஜி அண்ட் சன்ஸ்” என்ற உணவகம் 1878 முதல் ஒரே மெனுவைப் பயன்படுத்துகிறது.
ஒரே உணவை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது அது நமக்கு போர் அடித்துவிடும். அதனால்தான் ஹோட்டல்கள் அவ்வப்போது மெனுவை மாற்றி வித்தியாசமாக உணவைத் தயாரித்து வழங்குகின்றன.
ஆனால் ஒரு ஹோட்டலில் மட்டும் 1878 முதல் இப்போது வரை ஒரே மெனு உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ”டோராப்ஜி அண்ட் சன்ஸ்” என்ற உணவகம் 1878 முதல் ஒரே மெனுவை வைத்திருக்கிறது.
1878-ல் சொராப்ஜியால் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலை இப்போது அவருடைய பேரன் நடத்தி வருகிறார்.
இந்த உணவகத்தில் பார்சி பாணி அசைவ உணவைப் பரிமாறுகிறார்கள். பெரும்பாலும் மூத்த குடிமக்கள் இந்த ஹோட்டலின் வழக்கமான வாடிக்கையாளர்களாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
டோராப்ஜி அண்ட் சன்ஸ் உரிமையாளர் டேரியஸ் டோராப்ஜி கூறுகையில், “ வணிக நோக்கத்துடன் நாங்கள் இதை செய்யவில்லை.
இன்றும் பல மூத்த குடிமக்கள் இங்கிருந்துதான் உணவு வாங்கிச் செல்கிறார்கள். நான் அவர்களுடன் நல்ல உறவைப் பேணுகிறேன்.
ஏனென்றால், எங்கள் ஹோட்டல் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு எனக்குத் தெரியும். மேலும், தினமும் காலை ஆறு மணிக்கு புன்னகையுடன் எழுந்து கடைக்கு வந்து என் வேலையை செய்ய ஆரம்பித்து விடுவேன். அது தான் எனக்கு மகிழ்சியை தருகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் இது பற்றி கூறுகையில்” ஆண்கள் சமையல் செய்வார்கள், எங்கள் வீட்டு பெண்கள் மசாலா அரைத்து கொடுப்பார்கள். அது தான் எங்கள் குடும்ப பாரம்பரியம்.
சமையலறையிலும் , வாடிக்கையாளர்களை கவனித்து கொள்வதிலும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றார்.
டோராப்ஜி உணவகம் 1878 இல் டேரியஸின் பெரியப்பா சொராப்ஜி டோராப்ஜியால் தொடங்கப்பட்டது.
குஜராத்தின் நவ்சாரியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொராப்ஜி, தனது சகோதரர் பெஸ்டோன்ஜி டோராப்ஜியுடன் புனேவுக்கு பிழைப்பு தேடி வந்து இந்த ஹோட்டலைத் தொடங்கினர். அது நூற்றாண்டைத் தாண்டியும் வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!
“மோடி, அதானி தொடர்புக்கு ஆதாரம் உள்ளது” – ராகுல்காந்தி பதில் அறிக்கை!