Pulwama attack Modi says we will not forget the sacrifice

புல்வாமா தாக்குதல்: தியாகத்தை மறக்க மாட்டோம் என மோடி உருக்கம்!

இந்தியா

புல்வாமா தாக்குதலில்  வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி மாலை காஷ்மீரில் பயிற்சிகளை முடித்துவிட்டு முகாமிற்கு திரும்பிய மத்திய ரிசர்வ் படை போலீசாரின் வாகனங்கள் மீது, வெடிகுண்டு நிரப்பட்ட காரை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

புல்வாமா மாவட்டத்தில், ஸ்ரீநகர் – ஜம்மு சாலையில் நடந்த இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 40 பாதுகாப்பு படையினர் வீரமரணமடைந்தனர்.

இந்த மோசமான நிகழ்வு நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புல்வாமா தாக்குதலில் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்வோம்.

வீரர்களின் உயிர் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். வீரர்களின் தைரியம் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கலை.ரா

“அதானி விவகாரத்தில் மறைக்கவோ பயப்படவோ எதுவுமில்லை”: அமித்ஷா

தங்கம் விலையில் 2வது நாளாக வீழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “புல்வாமா தாக்குதல்: தியாகத்தை மறக்க மாட்டோம் என மோடி உருக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *