மகாராணி மறைவு: நீண்ட வரிசையில் பூங்கொத்து வைத்து அஞ்சலி!

Published On:

| By Jegadeesh

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று (செப்டம்பர் 8) காலமானார்.

ஸ்காட்லாந்த் பால்மோரவில் அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ட்ரஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து, எலிசபெத் மகாராணி தனது இறுதிமூச்சை விட்ட ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நீண்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மலர் கொத்துகளை இணையத்தில் வெளியான வீடியோ மூலம் காண முடிகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ராணி எலிசபெத்தும் இந்திய பிரதமர்களும்: நேரு முதல் மோடி வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share