ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக மத்திய கல்வித் துறை தெரிவித்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் எதிர்த்து வரும் நிலையில், அதனைச் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் 2024ஆம் ஆண்டு கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கையின் படி பாடத் திட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வை நடத்தவுள்ளது. ஒரு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அந்த மதிப்பெண் வைத்துக் கொள்ளப்படும்.
இரு மொழி பாடங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதில் ஒன்று இந்திய மொழிப் பாடமாக இருக்க வேண்டும்.
மாதக் கணக்கில் பயிற்சி மற்றும் மனப்பாடம் ஆகியவை தவிர்த்து, புரிதல் மற்றும் திறனின் அடிப்படையில்தான் பொதுத் தேர்வுகள் அமையும்.
மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு போதுமான நேரமும் வாய்ப்பும் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை வாரிய தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்த போதிலும் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
முதன்முறையாக 2021ல் கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால் 2023ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இது ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
“நான் ஓரளவுக்கு பேச காரணமே பீட்டர் அல்போன்ஸ்தான்”: மு.க.ஸ்டாலின்
துபாய் இளவரசியைக் கடத்த உதவியதா இந்தியா?