சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி58 : புத்தாண்டில் இஸ்ரோ சாதனை!

Published On:

| By christopher

PSLV-C58 successfully launched

‘எக்ஸ்போசாட்’ எனும் அதிநவீன செயற்கைக்கோளை சுமந்துகொண்டு இன்று (ஜனவரி 1) ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புத்தாண்டு தினமான இன்று 11 செயற்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டது.

அதன்படி 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.10 மணியளவில் தொடங்கியது.  தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியது.

ராக்கெட்டின் அனைத்து பணிகளும் சீராக இருந்த நிலையில், இன்று காலை 9.10 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட்.

https://twitter.com/PTI_News/status/1741666806014648744

இதில், பொருத்தப்பட்டுள்ள `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக தற்போது பிரிந்துள்ள நிலையில்,  பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது.

இவை தவிர திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவிகள் காலநிலை பற்றி ஆய்வு செய்வதற்காக தயாரித்த `வெசாட்’  உட்பட வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பிஎஸ் எல்வி சி58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி பாராட்டு தெரிவித்தனர்.

ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் காண ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று சுமார் 10 ஆயிரம் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆக்ரோச குரலாய் வெளியானது விஷாலின் ’வாராய் ரத்னம்’!

புத்தாண்டில் குறைந்த சிலிண்டர் விலை : எவ்வளவு தெரியுமா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share