“இந்தியர்களுக்கு பெருமை” – ஜி-20 மாநாட்டில் மோடி பேச்சு!
2023 ஆம் ஆண்டு ஜி-20 மாநாட்டை ஏற்று நடத்தும் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் வழங்கியது இந்தோனேசியா.
உலக நாடுகளின் கூட்டமைப்பு அங்கமே ஜி 20 நாடுகள் அமைப்பு. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா முதல், வளர்ந்து வரும் நாடுகள் வரை இக்குழுவில் அங்கம் வகிக்கிறது.
குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் ஜி20 மாநாட்டை ஏற்று நடத்த வேண்டும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான 17வது ஜி20 மாநாட்டை இந்தோனேசியா தலைமையேற்று நடத்தியது.
இந்தோனேசியா தலைநகர் பாலியில் கடந்த 2நாட்களாக நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டின் இறுதி நாளான இன்று(நவம்பர் 16), முறைப்படி ஜி20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ வழங்கினார்.
அதிகார முறைப்படி டிசம்பர் 1 ஆம் தேதி ஜி-20, 18ஆவது மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்படும்.
ஜி-20 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2023ஆம் ஆண்டு இந்தியா நடத்தவுள்ள ஜி-20 மாநாடு அனைவரையும் உள்ளடக்கிய வகையில், தீர்க்கமாகவும் செயல் சார்ந்ததாகவும் இருக்கும்.
அதேநேரத்தில் “ஜி 20” என்பது உலக அளவில் முதன்மையான குழுவாக செயல்படுத்துவதே இந்தியாவின் முயற்சியாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய மோடி, அடுத்த வருடம் இந்தியா நடத்தவுள்ள ஜி 20 மாநாட்டிற்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சி நிரலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துவது ஒவ்வொறு இந்தியருக்கும் பெருமை என்றும் கூறினார்.
மேலும், கலாச்சாரம், பண்பாடு என பரந்து காணப்படும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாகவும், ஜி-20 என்பதை உலக மாற்றத்திற்கான ஓரு தூண்டுகோலாக பயன்படுத்துவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கலை.ரா
விதி மீறிய ஏடிஜிபி வாகனம்: அதிரடி காட்டிய போலீஸ்!
“வேட்பாளரை பாஜக கடத்திவிட்டது”: ஆம் ஆத்மி!