பலாத்கார குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு: பில்கிஸ் பானு மனு தள்ளுபடி!

குஜராத்தில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கடந்த 2002-ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

குஜராத்தில் உள்ள தாஹோட் மாவட்டத்தில் லிம்கேடா தாலுகாவில் ஒரு கும்பலால் கொல்லப்பட்ட பன்னிரண்டு பேரில் அவரது மூன்று வயது மகளும் அடங்குவர்.

இந்த வழக்கில், ஜஸ்வந்த் நாய், கோவிந்த் நாய், ஷைலேஷ் பட், ரதியேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வொஹானியா, பிரதீப் மோர்தியா,

பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேர் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதில் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான தனது விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிடக் கோரி,

குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யம் பகவந்தாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு சில பரிந்துரைகளை செய்தது.

அதன்படி அவர்கள் அனைவரும் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட நிலையில் நன்னடத்தையை காரணம் காட்டி உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.

Protest against the release of rapists

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசின் ஒப்புதலோடுதான் இம்முடிவை எடுத்திருப்பதாக குஜராத் அரசு தெரிவித்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணை, நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் பேலா திரிவேதி முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,

இவ்விசாரணையில் இருந்து நீதிபதி பேலா விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதற்கான காரணம் தெரியாத நிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் குளிர்கால விடுமுறை வர இருப்பதால் மனுவை விரைந்து விசாரிக்கும்படி பில்கிஸ் பானு வழக்கறிஞர், தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தநிலையில் 11 பேர் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

கலை.ரா

அமைச்சர்..அதிகாரி..செருப்பு சர்ச்சை!

கூட்டுறவுத் துறையில் கட்சிக்காரர்களுக்கே வேலை: அமைச்சர் உத்தரவு என்னவாகும்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts