பணத்திற்காக கோவிட் வைரஸ் உருவாக்கம்: சர்ச்சையில் ஃபைசர்

இந்தியா

புதிய தடுப்பூசிகளை உருவாக்கி அதிக அளவில் பணம் சம்பாதிக்க கோவிட்-19 வைரஸ் உருமாற்றம் செய்வதற்கான ஆராய்ச்சியை ஃபைசர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜோர்டான் வாக்கர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபைசர் உலகின் முன்னணி மருந்தியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.

பைசர் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசியை உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

project veritas pfizer investigation

இந்தநிலையில், ப்ராஜெக்ட் வெரிடாஸ் என்ற புலனாய்வு செய்திகளை வெளியிடும் நிறுவனம் ஃபைசர் இயக்குனர் ஜோர்டான் வாக்கரிடம் நேர்காணல் நடத்தியது.

அதில் கோவிட்-19 தடுப்பூசியை அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றுவதற்கான ஃபைசரின் திட்டங்களைப் பற்றி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த ஜோர்டான் வாக்கர், “இதனை வெளிப்படையாக சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை.

நாங்கள் கொரோனா வைரஸ் உருமாற்றம் செய்வது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். குரங்குகளுக்கு உருமாற்ற வைரசை செலுத்தி எங்கள் ஆராய்ச்சியை தொடங்கி உள்ளோம். அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்கிறோம்.

புதிய கோவிட் வைரஸ் உருமாற்றம் செய்து பணம் சம்பாதிக்கும் யோசனையில் உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பேச்சு மருத்துவ துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஃபைசர் நிறுவனம், “நாங்கள் உருமாற்ற வைரஸ் குறித்து எந்தவிதமான ஆராய்ச்சியிலும் ஈடுபடவில்லை. தற்போது SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தை குறித்த ஆராய்ச்சியை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

அதிமுக வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?: செங்கோட்டையன்

காந்தியடிகள் நினைவு தினம்: ஆளுநர் முதல்வர் மரியாதை!

+1
0
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *