கோவிட்-19 வைரஸ் உருமாற்றம் செய்வதற்கான ஆராய்ச்சியை ஃபைசர் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக ப்ராஜெக்ட் வெரிடாஸ் என்ற நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
ப்ராஜெக்ட் வெரிடாஸ் என்ற புலனாய்வு செய்திகளை வெளியிடும் நிறுவனம் ஃபைசர் இயக்குனர் ஜோர்டான் வாக்கரிடம் நடத்திய நேர்காணலில், கோவிட்-19 தடுப்பூசியை அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றுவதற்கான ஃபைசரின் திட்டங்களைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த ஜோர்டான் வாக்கர், “நாங்கள் கொரோனா வைரஸ் உருமாற்றம் செய்வது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
குரங்குகளுக்கு உருமாற்ற வைரசை செலுத்தி எங்கள் ஆராய்ச்சியை தொடங்கி உள்ளோம். அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்கிறோம்.
புதிய கோவிட் வைரஸ் உருமாற்றம் செய்து பணம் சம்பாதிக்கும் யோசனையில் உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உருமாற்ற வைரஸ் குறித்து எந்தவிதமான ஆராய்ச்சியிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று ஃபைசர் நிறுனம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் ப்ராஜெக்ட் வெரிடாஸ் நிறுவனம் ஜோர்டான் வாக்கரிடம் நடத்திய நேர்காணல் வீடியோவை யூடியூப் நிறுவனமானது கோவிட் 19 வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்புவதாக கூறி நீக்கியுள்ளது. இதுகுறித்து அவசர வழிகாட்டுதல் ஆவணத்தை யூடியூப், ப்ராஜெக்ட் வெரிடாஸ் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது.
ப்ராஜெக்ட் வெரிடாஸ் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஓ.கீஃப் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா உருமாற்றம் ஆராய்ச்சி குறித்து நாங்கள் வெளியிட்ட வீடியோவை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது.
இந்த வீடியோவானது 8 லட்சம் பார்வையாளர்களை கடந்திருந்தது. ட்விட்டரில் இந்த வீடியோவை 20 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சிறுமி கர்ப்பம்: கம்பி எண்ணும் மந்திரவாதி!
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: லட்சக்கணக்கில் பாதிப்பு!