மேற்கு வங்கத்தில் மாணவரை பேராசிரியை வகுப்பறையில் வைத்து திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. professor marrying student
கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீ தொலைவிலுள்ள ஹாரிங்கதா தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இங்கு, சைக்காலாஜி துறையில் பாயல் பானர்ஜி என்பவர் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பாயல் பானர்ஜி திருமண உடையில் மாலை மாற்றி மாணவர் ஒருவரை திருமணம் செய்து கொள்வது போன்ற வீடியோ இணையத்தில் பரவியது. வகுப்பறையிலேயே இந்த திருமணம் நடந்துள்ளது.
கல்லூரி லெட்டர் பேடிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர். தலா 3 பேர் சாட்சி கையொப்பமிட்டுள்ளனர். இந்த திருமண ஒப்பந்தமும் இணையத்தில் பரவியது. இதனால், கல்லூரியில் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து, பாயல் பானர்ஜி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த திருமணம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாயல் கூறுகையில், ‘தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஷைக்காலஜிக்கல் டிராமா முறையில் திருமணம் நடத்தி பார்க்கப்பட்டதாகவும் , இந்த வீடியோவை தவறாக சித்திரித்து சிலர் இணையத்தில் பதிவேற்றியதால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.
உண்மை திருமணமோ போலி திருமணமோ, பேராசிரியை பாயல் சொல்லும் காரணம் நமக்கு நித்தியானந்தாவை நினைவுபடுத்தி விட்டது.
ரஞ்சிதா, நித்யானந்தா வீடியோ வெளியான பிறகு, ஆன்மீக பரிசோதனையில் ஈடுபட்டு பார்த்தேன் என்று நித்யானந்தா பதில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.