தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூ.1000 வரவு வைக்கும் பணி இன்று (நவம்பர் 9) தொடங்கியிருக்கிறது.
திமுக அளித்த வாக்குறுதியின் படி, ஆண்டிற்கு ரூ.12.000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் 1.63 கோடி பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.
இரண்டாவது மாதமான அக்டோபரில் 14ஆம் தேதி தகுதியுடைய பெண்களுக்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டது,
அதேசமயம், இந்த திட்டத்தில் பயன்பெற மேல்முறையீடு செய்தவர்களின் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வந்தன. அதன்படி 2ஆம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 11.85 லட்சம் பேர் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டனர். 2ஆம் கட்ட மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு நவம்பர் 9 அல்லது 10ஆம் தேதியே உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி, மேல்முறையீடு செய்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கியிருப்பதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் மட்டுமின்றி, இந்த திட்டத்தின் பயனாளர்கள் அனைவருக்கும் நாளைக்குள் குறுஞ்செய்தி வரும் எனவும் கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்கூட்டியே ரூ.1000 வழங்கப்படுவது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்..
பிரியா
ஜப்பான், ஜிகர்தண்டா 2 – சிறப்பு காட்சிக்கு அனுமதி!
‘லால் சலாம்’ காட்சிகள் டெலீட் ஆகிவிட்டதா?