2023ஆம் ஆண்டில் இரு மாதங்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் மகளிர் அணி அணிவகுப்பு நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், பாஜகவை வீழ்த்தி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்
இன்றுடன் அவரது நடை பயணம் மத்தியப் பிரதேசத்தில் நிறைவடைந்து பின்பு ராஜஸ்தானில் நுழைகிறது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 4) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி.கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் அணி பேரணி 2023 ஆம் ஆண்டு இரண்டு மாதங்களுக்கு நடைபெறும்.
அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது அதன் தொடர்ச்சியாக பிரியங்கா காந்தியின் இந்த பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியா
ஜெ நினைவு தினம்: இன்றே திதி கொடுத்த முன்னாள் அமைச்சர், எம். பி.!
குஜராத் மக்களுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை!