பிரதமரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

99 வயதாகும் பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி, உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 27) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவருடைய உடல்நிலை குறித்த மற்ற எந்த விவரங்களையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

prime minister mother heeraben modi admitted in hospital

குஜராத் பாஜக எம்எல்ஏக்கள் தர்ஷனாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் ஆகியோர் பிரதமரின் தாயாரை நேரில் சென்று பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அந்த தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

பொங்கல் தொகுப்பில் கரும்பு: அரசு அறிவிப்பு!

ரயில்வே தேர்வு : உயர்சாதி ஏழைகளுக்கு கட் ஆப் குறைவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *