“மாநிலங்களவை நாட்டின் மிகப்பெரிய பலம்” – பிரதமர் மோடி

இந்தியா

மாநிலங்களவை நமது நாட்டின் மிகப்பெரிய பலம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 7) நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரண்டு அவைகளிலும் துவங்கியது. இந்த கூட்டத்தொடரானது டிசம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு மக்களவையில் கூட்டம் துவங்கியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையின் சபாநாயகராக துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் பேசியபோது, “இந்த அவையின் சார்பாகவும், தேசத்தின் சார்பாகவும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டங்களுக்கு நடுவில் இந்த பதவியை நீங்கள் அடைந்துள்ளீர்கள். இது நாட்டில் உள்ள பலருக்கு உத்வேகமாக இருக்கும். நாம் நமது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணத்திலும், ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தருணத்திலும், இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நமது மரியாதைக்குரிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னாள் குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு சட்ட விஷயங்கள் பற்றிய சிறந்த அறிவு உள்ளது. நமது பாராளுமன்றம் பொறுப்புடன் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பிரகாசமாக இருக்கும். மாநிலங்களவை நமது நாட்டின் மிகப்பெரிய பலம். நமது நாட்டின் முன்னாள் பிரதமர்கள் பலர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.” என்றார்.

செல்வம்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை!

தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ்: வெளுக்கப் போகும் கனமழை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *