சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை அருகே எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே கட்டப்பட்டுள்ள அடல் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 27 ) திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சபர்மதி ஆற்றங்கரையின் அழகை காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கவர்வதற்காக எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த 300 மீட்டர் பாலம் சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கிறது.
இந்த பாலம் மேற்குக் கரையில் உள்ள மலர் பூங்கா மற்றும் நிகழ்வு மைதானம் இடையே உள்ள பிளாசாவிலிருந்து கிழக்குக் கரையில் உள்ள உத்தேச கலை, கலாச்சார, கண்காட்சி மையத்தை இணைக்கிறது.

இந்நிலையில், அடல் மேம்பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசுகையில்;
“அடல் மேம்பாலம் சபர்மதி ஆற்றின் இரு கரைகளை இணைப்பது மட்டுமல்லாமல், அதன் வடிவமைப்பு மற்றும் பொறியியலில் தனித்துவமாக இருக்கிறது.
குஜராத் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மிகுந்த அன்பைக் கொடுத்தது. 1996ல், அடல் பிகாரி வாஜ்பாய் காந்திநகரில் இருந்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
இங்கு பாலம் அமைத்திருப்பது அடல்ஜிக்கு செய்திருக்கும் மரியாதை” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிறப்புக் கட்டுரை: மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்!