”கனவு காணும் காங்கிரஸ்”: கிண்டல் செய்த மோடி

இந்தியா

மைசூர்-பெங்களூரு ஆறுவழி விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 12) திறந்து வைத்து உரையாற்றினார்.

கர்நாடக மாநிலம் மைசூர்-பெங்களூரு விரைவுச்சாலை 118 கிலோ மீட்டர் தொலைவில் மொத்தம் ரூ.8,480 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. என்.எச் 275 மைசூர்-பெங்களூரு விரைவுச்சாலை ஆறு வழிச்சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவுச்சாலை மூலமாக பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரைவு சாலையைத் திறந்து வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா வந்தார். அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், மாண்டியா மற்றும் ஹுப்பள்ளி-தர்வாட் மாவட்டங்களில் சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மைசூர்-பெங்களூரு விரைவுச்சாலையை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியினர், “மோடி உங்கள் கல்லறை தோண்டப்படும்” என்று முழக்கங்களை எழுப்பியதைக் குறித்து விமர்சித்திருந்தார்.

”மோடிக்குக் கல்லறை தோண்ட வேண்டும் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது. ஆனால் நான் விரைவுச்சாலைகள் அமைப்பதில் மும்முரமாக ஈடுபடுவது மற்றும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வருகிறேன். அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மக்களின் ஆசீர்வாதம் எனக்கு கவசமாக இருக்கிறது என்பது என்னை அடக்கம் செய்ய நினைக்கும் காங்கிரஸுக்கு தெரியாது.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக எதையும் விட்டு வைக்கவில்லை. ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்தது” என்று பேசியிருந்தார்.

மோனிஷா

’மிஸ்’ ஆனாலும் மிரட்டிய விராட் கோலி… கடைசி நாளில் சாதிக்குமா இந்திய அணி?

ஆன்லைன் ரம்மி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *