amazon flight delivery service

’பிரைம் ஏர்’ : விமானச் சேவையை அறிமுகப்படுத்திய அமேசான்

இந்தியா

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு விரைவான டெலிவரி சேவைக்காக அமேசான் நிறுவனம் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நாளுக்கு நாள் மக்கள் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொண்டு மக்கள் தற்போது ஆன்லைன் மூலம் வாங்கத் தொடங்கி விட்டனர்.

இதனால் உலகளவில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் உருவாகிவிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமும் தங்களது வேகமான, தரமான சேவைகளின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் போட்டிப் போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அமேசான் நிறுவனம் வேகமான பார்சல் சேவைக்காக விமானச் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான குயிக்ஜெட் உடன் இணைந்து அமேசான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த சேவையானது முதலில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செயல்பட உள்ளது. ”இது விமான துறைக்குப் பெரிய முன்னேற்றம்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 36 சரக்கு விமானங்களுடன் விமான பார்சல் சேவையை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் தேமுதிக : வேட்பாளர் அறிவிப்பு!

“அன்பான புத்திசாலி பெண் கிடைத்தால் திருமணம்” – ராகுல்காந்தி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *