இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்கிறார். மேலும் சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வரும் நிலையில், உக்ரைனும் சரி சமமாக ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
ரஷ்யாவுக்கு சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. அண்மையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வடகொரியா ஆயுத உதவியை செய்து இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதோடு அது தொடர்பான செயற்கை கோள் படங்களையும் வெளியிட்டு இருந்தது.
ரஷ்யா – உக்ரைன் போர் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் உச்சம் அடைந்து இருக்கிறது. இத்தகைய சூழலில், ரஷ்ய அதிபர் புதின் சீனா பயணம் மேற்கொண்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீனாவின் மிகப் பெரிய பொருளாதார வழித்தட திட்டமான மூன்றாவது பெல்ட் அண்ட் ரோடு திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சீனாவில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் 130 நாடுகள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க புதின் சென்றதாக கூறப்பட்டாலும் ரஷ்ய – உக்ரைன் போர் குறித்து விவாதிப்பதே முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
27 மீனவர்கள் கைது: பாம்பன் போராட்டம் வாபஸ்… ரயில் மறியல் அறிவிப்பு!
லியோ LCU தான்… உறுதி செய்த உதயநிதி
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்…. ஒரு மாதம் ஆகியும் டென்ஷன் குறையாத எடப்பாடி