பிகாரைச் சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க. ஜனதா தளம், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வந்த இவர், தற்போது ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். இதையடுத்து, தீவிர அரசியலிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
பிகாரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் போது தேர்தல் வியூகம் அமைப்பதற்காக தான் வாங்கிய சம்பளம் பற்றி பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக பேசியுள்ளார்.பெலகஞ்சில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “என்னுடைய பிரசாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைத்துக் கொள்கிறீர்களா?
தேர்தலுக்கு ஒருவருக்கு நான் ஆலோசனை கூறினால் எனக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ.100 கோடி. அதற்கு மேலும் கூட பெறுவேன். இதுபோன்ற ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை கூறினால் எனது பிரசாரத்திற்கு செலவு செய்ய முடியும். இந்த நாட்டில் 10 மாநிலங்களில் நான் வகுத்து கொடுத்த வியூகங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
புரோ கபடி: முதல் இடத்தை பிடித்து தமிழ் தலைவாஸ் அசத்தல்!
30 கோடி இல்லனா மார்க்கெட் வேல்யூ… ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறிய பின்னணி!