pragyan rover confirms oxygen in moon

நிலவில் ஆக்சிஜன்: உறுதி செய்த ரோவர்!

இந்தியா

நிலவில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் ஆய்வு பணிக்காக ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை வெற்றிகரமாக தரையிறங்கியது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

ரோவரின் செயல்பாடுகள் குறித்த அப்டேட்டுகளையும் இஸ்ரோ தொடர்ந்து கொடுத்து வருகிறது. சமீபத்தில் நிலவின் வெப்பநிலை குறித்த தகவலை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது ரோவர்.

இந்த நிலையில் தான் நிலவில் ஆக்சிஜன் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது. இது குறித்து நேற்று (ஆகஸ்ட் 29) இரவு இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவின் தென்துருவ மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், கால்சியம், சல்ஃபர், இரும்பு, குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீஸ் மற்றும் ஆக்சிஜன் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது.

லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி (LIBS) மூலம் பிரக்யான் ரோவர் நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிந்துள்ளது.  தற்போது நிலவில் ஹைட்ரஜன் வாயு இருக்கிறதா? என்பதை கண்டறிய ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்ததோடு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வருகிறது.

மோனிஷா

சேலம் ஆர்ஆர் பிரியாணி ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்!

வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *