பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலரும் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். அதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி அந்த ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அந்த மாணவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் சமூக வலை தளமான ட்விட்டரில் தற்போது ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாற்றி வருவதாக சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 20 முதல் 30 ரூபாய்க்கு மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக ட்விட்டர் மாறி வருகின்றது.
சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோக்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் பெண்கள் குறித்து ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
போதையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்!
இந்திய அணி தேர்வு: பாகிஸ்தான் வீரரின் விமர்சனம்!