ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன், பழைய கார்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 21) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.
இதில்,பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உப்பு மற்றும் மசாலா கலந்த பாப்கார்ன் மற்றும் நம்கீன்ஸ் போன்றவற்றுக்கு பேக்கிங் செய்யப்படாமல் மற்றும் லேபிள் இல்லாமல் வழங்கப்பட்டால் 5 சதவிகித ஜிஎஸ்டி மற்றும் பேக்கிங் செய்யப்பட்டு லேபிளிடப்பட்டால் 12 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
சர்க்கரை கலந்த அதாவது கேரமல் பாப்கார்ன் ஆகியவை HS 1704 90 90 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ஆட்டோகிளேவ்டு ஏரேட்டட் கான்க்ரீட் (ஏஏசி) பிளாக்ஸ் 50% க்கும் அதிகமான ஃப்ளை ஆஷ் உடன் தயாரிக்கப்பட்டு இருந்தால், அவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இன்றைய விவாதத்தின் போது உடன்பாடு இல்லாததைத் தொடர்ந்து கூடுதல் மறுஆய்வுக்காக காப்பீடு தொடர்பான சிக்கல்கள் குறித்த முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள்? கேட்டவர்களுக்கு பட்டியல் போட்டு ஸ்டாலின் பதிலடி!
‘துக்கவீடு போல இருக்க கூடாது; கல்யாண வீடு போல களை கட்ட வேண்டும்’ – இறப்பை கொண்டாடிய பின்னணி