ஜி-20 மாநாட்டுக்காக தரைமட்டமான ஏழை மாணவர்களின் பள்ளி!

இந்தியா

டெல்லியில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தும் பணிக்காக பள்ளி இடித்து தள்ளப்பட்டதில் 35 ஏழை மாணவர்கள் நிர்கதியாகி உள்ளனர்.

டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நகரின் பல பகுதிகளை அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

பாதுகாப்பு படையினர் உதவியுடன் பொதுப்பணி துறையினர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரகதி மைதான் பகுதிக்கு முன் அமைந்து இருந்த பள்ளிக்கூடம் ஒன்றை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.

அந்த இடத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த பள்ளி செயல்பட்டு வந்து உள்ளது.

நீத்து என்ற சமூக சேவகர், சப் கி பாத்சாலா என்ற பெயரில் தற்காலிக பள்ளிக்கூடம் ஒன்றை அமைத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி வந்து ள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள நீத்து, “கடந்த ஜனவரி 28ஆம் தேதி இடம் காலி செய்யும்படி குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ் வந்தது. அவர்கள் உயர் நீதிமன்றத்துக்கும் சென்றும் பலனில்லை. மே 31ஆம் தேதி வரை அவர்கள் காலி செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், கோசாலை மற்றும் கோயிலை அதிகாரிகள் ஒன்றும் செய்ய கூடாது என கூறப்பட்டது.

ஆனால், கோசாலை மற்றும் கோயிலை விட்டுவிட்டு, பள்ளிக்கூடம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பெப்பர் பனீர்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *