காட்டுக்குள் நின்ற காருக்குள் 52 கிலோ தங்கம், 9 கோடி கேஷ்… அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

Published On:

| By Kumaresan M

மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே காட்டுக்குள் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.

நீண்ட நேரமாக அங்கேயே இன்னோவா கார் இருந்ததால் சந்தேகமடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசாருடன் வருவாய்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். காரின் ஜன்னலை உடைத்து சோதனை செய்து பார்த்தனர்.

காருக்குள் சில பேக்குகள் இருந்தன. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட போலீசார் மெல்ல மெல்ல அந்த பேக்குகளை திறந்து பார்த்தனர்.

உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். அதே போல சில பேக்குகளில் தங்க கட்டிகளும் இருந்தன. இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்தனர். தொடர்ந்து, போலீசார் அந்த காரை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

வருவாய்துறை அதிகாரிகள் பணத்தை எண்ணிய போது, ரூ.9.8 கோடி இருந்தது. அதே போல, தங்கக்கட்டிகள் 52 கிலோ இருந்தது.

தங்கம் மட்டும் ரூ.42 கோடி மதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, காரை விட்டு சென்றது யார் ? என்று போலீசார் தேடினர்.

தங்கள் வீட்டுக்கு ரெய்டு வரலாம் என்கிற எண்ணத்தில் யாராவது இப்படி பணத்தையும், தங்கத்தையும் மறைத்து வைத்து விட்டு போயிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்தது.

கார் பதிவெண்ணை கொண்டு விசாரித்த போது, குவாலியரை சேர்ந்த சேத்தன் சிங் என்பவருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இவர் போபாலில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் அவரிடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக போபாலில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவர் வீட்டில் சோதனை நடத்திய போது, வங்கியில் ரூ.2.89 கோடிக்கு பணம் வைத்திருந்தார். ரூ.3 கோடிக்கும் அதிகமாக அவருக்கு சொத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய்துறை அதிகாரிகளின் அதிரடி ரெய்டுக்கு பயந்து இத்தகைய காரியத்தை செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ Sr காலமானார்!

தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள்? கேட்டவர்களுக்கு பட்டியல் போட்டு ஸ்டாலின் பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share