இந்திய போர் விமானங்கள் மோதி கோர விபத்து: விமானி உயிரிழப்பு!

இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில், சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் இன்று (ஜனவரி 28) வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக மொரீனா என்னும் கிராமப் பகுதியில் இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

indian aircraft accident

இதில் இரண்டு விமானங்களும் வானில் இருந்து கீழே விழுந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் விளக்கமளித்துள்ளார். மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில், மொரேனாவில் விமானப்படையின் சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

விமானப்படையினரோடு இணைந்து உள்ளூர் நிர்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். விபத்திற்குள்ளான விமானத்தை இயக்கிய விமானிகள் பத்திரமாக இருக்க நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் சிக்கிய 2 விமானிகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விமானப் படையைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் இன்று (ஜனவரி 28) காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது குவாலியர் பகுதியில் விபத்தில் சிக்கியது.

விமானத்தில் இருந்த 3 விமானிகளில் ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

பிச்சை தான் எடுக்கனும்: மதுரை முத்து ஆவேசம்!

விமான கண்காட்சியை முன்னிட்டு 5 நாட்கள் இறைச்சி விற்க தடை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *