தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய விதிமுறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியா

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தித் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

வழக்கு விசாரணையின் போது, தற்போதைய இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் அவசரமாக நியமிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. குறிப்பாக அருண் கோயல் மத்திய அரசு பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற, மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

இதில், மத்திய அரசு, மனுதாரர்கள் வாதங்கள் எல்லாம் முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் இன்று (மார்ச் 2) உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரையின் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பார் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பாஜக அரசுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் இப்படியொரு சீர்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது.

பிரியா

லைகா கொடுத்த மாஸ் அப்டேட்!

ஈரோடு கிழக்கு – முதல் சுற்று முடிவு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *