ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றுவார்.
சீட்டாவுக்கு பெயர்
இன்று (செப்டம்பர் 25) பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது, “ஆப்பிரிக்காவிலிருந்து சீட்டா சிறுத்தைகள் இந்தியாவிற்கு வந்ததால், நாட்டின் பல பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீட்டா சிறுத்தை குறித்து அனைவரும் பேசுகின்றனர். சிறப்பு பணிக்குழு தொடர்ந்து சிறுத்தைகளை கண்காணித்து வருகிறது.
அதன் அடிப்படையில் சீட்டா சிறுத்தைகளை பொதுமக்கள் பார்வையிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
சீட்டா சிறுத்தைகள் இந்தியா வருகை குறித்தும், சிறுத்தைகளுக்கு பெயர் சூட்டுவது குறித்தும் மக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டும்.
சிறுத்தைகளுக்கு பெயர் சூட்டும் போது நம் மரபிற்கு ஏற்றார்போல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
மேலும், மனிதர்கள் விலங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் பரிந்துரைக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் நீங்கள் பங்கேற்பதால், சிறுத்தையை பார்க்கப் போகும் முதல் ஆளாகக் கூட நீங்கள் இருக்கலாம். இந்தப் போட்டி My Govt தளத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்
பகத்சிங் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும்.
இன்று இந்தியா அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை ஊக்குவித்து அவர்களின் தன்னம்பிக்கையை வளப்படுத்துவதற்காக நிறைய பேர் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
உள்நாட்டுப் பொருட்கள் உறுதிமொழி
அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் அனைவரும் உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும்.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், நாம் பாலீதின் பைகளை அதிகளவில் பயன்படுத்துகிறோம்.
பாலீதீன் பைகளை பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். சணல் மற்றும் மூங்கில்களால் தயாரிக்கப்பட்ட பைகளை நாம் பயன்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
செல்வம்
20 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஒயிட் வாஷ்’: இந்திய மகளிர் அணி செய்த தரமான சம்பவம்!
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார்?