இரண்டு நாள் பயணமாக, கேரளா சென்ற பிரதமர் மோடி கொச்சி கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் இன்று (செப்டம்பர் 2) அறிமுகப்படுத்தினார்.

கொச்சி கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இந்தியாவின் பாதுகாப்புத் துறையை தன்னிறைவு அடையச் செய்வதற்கான அரசாங்கத்தின் உந்துதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
உள்நாட்டிலேயே விமானம் தாங்கிய போர்க்கப்பல்களை உருவாக்கக்கூடிய தேர்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் குழுவில் இந்தியா இணைகிறது.
விக்ராந்த் கப்பல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 5,000 வீடுகளுக்கு வழங்க முடியும்” என்றார்.
“விக்ராந்த் போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது, தன்னம்பிக்கை இந்தியாவை நோக்கிய இந்திய அரசின் வரலாற்று மைல்கல்” என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
செல்வம்
”காவலுக்கு வந்த கடல் ராசா” : ஐ.என்.எஸ். விக்ராந்தின் மறுபிறப்பு!