பிரதமர் நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தில் இன்று (ஜூன் 27) ஐந்து வந்தே பாரத் ரயில் சேவைகளை துவக்கி வைக்கிறார்.
பயண நேரத்தை குறைப்பதற்காக இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் இந்த ரயிலில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐந்து வந்தே பாரத் ரயில் சேவைகளை துவக்கி வைக்கிறார். இதுவரை இந்தியா முழுவதும் 19 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக ஐந்து ரயில்கள் துவங்கப்பட உள்ளதால், வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி போபால் – ஜபால்பூர், கஜூராஹோ – போபால், கோவா – மும்பை, தார்வாட் – பெங்களூரு, ஹைதியா – பாட்னா ஆகிய வழித்தடங்களில் இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
போபால் – ஜபால்பூர் வந்தே பாரத் ரயிலானது பெரகாட், பச்மாரி, சத்புரா போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு செல்கிறது. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மிகவும் ஏதுவாக இந்த ரயில் இருக்கும்.
கோவா- மும்பை வந்தே பாரத் ரயிலானது கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இது சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையத்திலிருந்து கோவா மட்கான் ரயில் நிலையம் வரை செல்லும். இந்த தூரத்தை விரைவு ரயிலில் எட்ட 7.30 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயில் 30 மிடங்கள் முன்னதாக பயண தூரத்தை சென்றடையும்.
தார்வார்ட் – பெங்களூரு ரயிலானது கர்நாடகா, தார்வார்ட், ஹூபள்ளி, தாவாங்கரே போன்ற முக்கியமான பகுதிகளை இணைக்கிறது.
ஹைதியா – பாட்னா ரயிலானது ஜார்கண்ட், பிகார் மாநிலங்களின் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.
செல்வம்
வரத்து குறைவு: மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தக்காளி விலை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!