“பிரான்சில் திருவள்ளுவர் சிலை” – பிரதமர் மோடி உறுதி!

இந்தியா

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அவருக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ரூ.90 ஆயிரம் கோடியில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி லா சின் மியுசிகல் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் இன்று பேசும்போது தமிழ் மொழியையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பேசினார். அப்போது அங்கிருந்தவர்கள் கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பிரதமர் பேசும்போது, “இந்தியா உலகில் வளர்ந்த நாடாக முன்னேறி வருகிறது. சர்வதேச அமைப்புகள் இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. ஐக்கிய நாடுகளின் சமீபத்திய அறிக்கை 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு மேல் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும். பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுவது இந்தியாவிற்கு பெருமையான தருணங்களில் ஒன்றாகும். உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ். உலகின் தொன்மையான மொழி இந்தியாவில் இருக்கும் போது அதை விட பெரிய பெருமை இந்தியாவிற்கு என்ன இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செந்தில் பாலாஜி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு இடையீட்டு மனு!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இரண்டு தங்கம்!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0