ரயில் விபத்தில் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பாலசோர் மாவட்டம் பஹானா பகுதியில் பிரதமர் மோடி இன்று (ஜுன் 3) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் பாலசோரில் உள்ள ஃபகிர் மோகன் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,
“இது மிகவும் துயரமான நிகழ்வாகும். ரயில் விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது. காயமடைந்தவகளுக்கு அரசு விரைவான சிகிச்சை அளித்து வருகிறது.
தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் விரைவான மீட்பு பணியில் ஈடுபட்ட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒடிசாவில் விபத்து நடந்த பகுதியில் நிலைமையை ஆய்வு செய்தேன். என் சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்!
மோதல் தடுப்பு கருவி எங்கே?: நேரடியாகவே ரயில்வே அமைச்சரிடம் கேட்ட மம்தா
புல்வாமா இராணுவ தாக்குதலுக்கு அரசே காரணமென முன்னாள் ஆளுநர் சொன்னாரே அதே போல் தான் இதுவும் காரணமாக இருக்கும், இந்த கோர விபத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு உதவும், மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். பழியை பக்கத்து நாட்டு மேல் போடுவானுங்க….மக்களே உஷார்