ரூ.451 கோடியில் வாரணாசி ஸ்டேடியம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர்!

Published On:

| By christopher

pm modi lay foundation at varanasi cricket stadium

வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான கட்டுமான தொடக்கவிழாவில் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 23) அடிக்கல் நாட்டினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடியின் பெயரிலேயே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் திறந்துவைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியிலும் நவீன வசதிகள் கொண்ட கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இணைந்து மைதானத்தை அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

நிலம் கையகப்படுத்த ரூ.121 கோடியை உ.பி அரசும், கட்டுமான பணிகளுக்கு சுமார் ரூ.330 கோடியை பிசிசிஐயும் என மொத்தம் ரூ.451 கோடி மைதானத்திற்காக செலவிடப்பட உள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,  ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் போன்ற கிரிக்கெட் வீரர்களும்,

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு NAMO என்று பெயர் பொறித்த இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை சச்சின் வழங்கி வரவேற்றார்.

 

நவீன, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை கொண்டு, 30,000 பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்படுகிறது.

மேலும் பிறை வடிவ கூரை விதானங்கள், திரிசூலங்களை ஒத்த உயர்மட்ட விளக்குகள் படித்துறை படிகள் போன்ற இருக்கைகள் மற்றும் முகப்பில் பிரம்மாண்ட உடுக்கை போன்ற கட்டுமானங்கள் இந்த புதிய மைதானத்தில் இடம்பெற உள்ளன.

கிறிஸ்டோபர் ஜெமா

தொழில்‌ நிறுவனங்களின் மின்‌ கட்டணம் குறைக்க முதல்வர் உத்தரவு!

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share