சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 26) பாராட்டினார்.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வருகிறது.
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வுகளை பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக பார்த்தார். தொடர்ந்து அவர் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை பிரதமர் மோடி பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக இஸ்ரோ விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவரை இஸ்ரோ தலைவர் சோம்நாத் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளை வாழ்த்தினார்.
செல்வம்
மதுரை ரயில் தீ விபத்து: 6 பேர் பலி!
கிச்சன் கீர்த்தனா: கார்ன் சாலட்
போதைப்பொருள் விற்பனை… காவல்துறையினர் மீது நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை!
மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு!