தமிழக முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இன்று(ஜூலை 15) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையை அவரது 121 வது பிறந்த நாளான இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக அதிகாரமளிப்புக்கு காமராஜர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் காமராஜருக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன்.
சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக உள்ளது.
I pay homage to Thiru K. Kamaraj on his Jayanti. A stalwart who devoted his life to India’s development, his emphasis on social empowerment is a guiding force for us all. We reiterate our commitment to fulfilling his vision towards poverty alleviation and public welfare.
— Narendra Modi (@narendramodi) July 15, 2023
வறுமை ஒழிப்பு மற்றும் பொது நலன் குறித்து அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கலைஞர் நூலகத்தின் ஏழு தளங்கள்…. ஏழு கண்டங்கள்: வைரமுத்து