வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 5) பாராட்டியுள்ளார்.
பெர்லினில் நடைபெற்று வந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோர் மெக்சிகோ அணியை சேர்ந்த டேபின் குவின்டிரோ, அனா சோபா ஹெர்னாண்டஸ் ஜியான், அன்ட்ரியா பெக்ரா வீராங்கனைகளை 235-229 புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் பெற்றனர்.
இதன் மூலம் வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று தந்த முதல் வீராங்கனைகள் என்ற சாதனையை பெற்றுள்ளனர்.
வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பெர்லினில் நடைபெற்ற மகளிருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களை பாராட்டுகிறேன். அவர்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வில்வித்தை போட்டியில் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் கொலம்பியா அணியையும் , காலிறுதி ஆட்டத்தில் சீனாவையும் வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா!
தூத்துக்குடியில் களைகட்டிய பனிமய மாதா தேர் திருவிழா!