ஆசிரியர்களை சந்திக்கும் பிரதமர் மோடி

இந்தியா

ஆசிரியர் தினம் இன்று (செப்டம்பர் 5) கொண்டாடப்பட உள்ளதால் தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

நல்லாசிரியர்களைச் சந்திக்கும் பிரதமர்

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பைக் கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் தின விருதின் நோக்கமாகும்.

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கான மக்களின் அங்கீகாரத்தைத் தேசிய ஆசிரியர் விருது அளிக்கிறது.

இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளிலிருந்து நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை , லோக் கல்யாண் மார்கில் மாலை 4:30 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். தமிழகத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் இடம்பெற்றுள்ளார்

மோனிஷா

தென்னிந்தியாவின் மீது மோடிக்கு சிறப்புப் பற்று இருக்கிறது: அமித் ஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0