2006ல் விமான விபத்தில் கணவனை இழந்த பெண், 2023ல் நடந்த நேபாள விமான விபத்தில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 15ஆம் தேதி நேபாளத்தில் பொக்காரா பகுதியில் எட்டி ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானது. இதில் விமான ஊழியர்கள், இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 72 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர். 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த விமான விபத்தில் துணை விமானியான அஞ்சு கதீவாடா உயிரிழந்தார். இவரது கணவர் ஏற்கனவே விமான விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், “அஞ்சு கதீவாடா கணவர் தீபக் பொக்ரேல். இவர் 2006ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
நேபாள விமான நிறுவனமான எட்டி ஏர்லைன்சின் சிறிய ரக விமானம் ட்வின் ஒட்டர். இதில் பணியிலிருந்த போது ஜூம்லா பகுதியில் 2006ல் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
அவர் இறந்ததையடுத்து வந்த இன்சூரன்ஸ் பணத்தை வைத்து விமானியாக பயிற்சி பெற்ற அஞ்சு கதீவாடா 2010ல் துணை விமானியாக பணியில் சேர்ந்தார். மொத்தம் 6,400 கிமீ வரை பணியிலிருந்த போது விமானத்தை இயக்கியுள்ளார்.
இந்த விபத்தில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்றாலும், உடல் இதுவரை மீட்கப்படவில்லை. கடந்த ஞாயிறு அன்று ஒரு பயிற்றுவிப்பாளர் பைலட்டுடன் விமானத்தை இயக்கினார்” என்று கூறியுள்ளார்.
எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் கமலுடைய உடல் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துகளில் கிட்டத்தட்ட 350 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
வடிவேலுவுக்கு முதல்வர் சொன்ன ஆறுதல்!
வாரிசு துணிவு: தவறான வசூல் தகவலும் திருப்பூர் சுப்பிரமணி பதிலும்!