6ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே 25) நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
6ஆம் கட்ட வாக்குப்பதிவு:
,உத்தரப் பிரதேசம், ஹரியானா, பீகார், மேற்கு வங்காளம், டெல்லி, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில், காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவீதம் பேர் வாக்களித்தனர். தொடர்ந்து 11 மணி நிலவரப்படி, 25.76 சதவீத வாக்காளர்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர்.
அதன்படி,
பீகார் – 23.67%
ஹரியானா – 22.09%
ஜார்க்கண்ட் – 27.80%
டெல்லி – 21.69%
ஒடிசா – 21.30%
உத்தரப் பிரதேசம் – 27.06%
மேற்கு வங்காளம் – 36.88%
ஜம்மு காஷ்மீர் – 23.1%
வாக்களித்த அரசியல் தலைவர்கள்
6ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் டெல்லி ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாக்களித்தார்.
திரவுபதி முர்முவைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர் டெல்லியில் தனது வாக்கினை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தொடர்ந்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பல அரசியல் தலைவர்களும், நடிகர்களும், விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவுன்னு பாருங்க!
சீரியஸ் விமல், ஜாலி கருணாஸ்… “போகுமிடம் வெகு தூரமில்லை” டிரைலர் எப்படி..?