80 சதவிகிதம் தண்ணீர் ;20 சதவிகிதம் பெட்ரோல் ; பங்க் செய்த தில்லாலங்கடி!

Published On:

| By Kumaresan M

மகாராஸ்டிர மாநிலம் புனேவில் சாகுநகர் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய பிறகு, ஏராளமான வாகனங்கள் பாதியிலேயே நின்று போயுள்ளன. 2 லிட்டர் போட்டவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. முதலில் பலரும் வாகன இன்ஜினில் கோளாறு அல்லது வண்டியில் வேறு கோளாறு இருக்கலாம் என மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு சென்றுள்ளனர். 8 0%petrole pump cheats customer of water instead of petrol

அப்போது, சோதனை செய்த போது, பெட்ரோலில் பெருமளவு தண்ணீர் கலந்திருப்பது தெரிய வந்தது. அதாவது, 20 சதவிகித பெட்ரோலுடன் 80 சதவிகித தண்ணீரை கலந்து பெட்ரோலை விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து, கோபமடைந்த வாடிக்கையாளர்கள் அந்த பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புனே போலீஸ் அதிகாரிகளும் பெட்ரோல் நிறுவன அதிகாரிகளும் உரிய ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். petrole pump cheats customer

அதே வேளையில், தண்ணீர் வேண்டுமென்றே கலக்கப்பட்டதா? அல்லது முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக, தரைக்கு அடியில் பெட்ரோல் ஸ்டோரேஜ் செய்யப்பட்டுள்ள டேங்கில் தண்ணீர் தானாக கலந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share